கோவை மார்க்கெட்டில் மகராஷ்டிரா பெரிய வெங்காயம் கிலோ ரூ.65க்கு விற்பனை

கோவை, அக். 30: பெரிய வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்த நிலையில் மகராஷ்டிராவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.65 வரை கோவை மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. கோவைக்கு வெளி மாநிலங்களான மகராஷ்டிரா, கார்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 200 முதல் 250 டன் வரை பெரிய வெங்காயம் வரத்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வெங்காயம் வரத்து கோவைக்கு வருவது குறைந்தது.

 இதன் காரணமாக பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்து கிலோ ஒன்று ரூ.100க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டன. அதன் பின் வெங்காய வரத்து அதிகரிக்க துவங்கியது. தற்போது பெரிய வெங்காயத்தின் கிலோ ஒன்று ரூ.65 வரை விற்பனை செய்யப்படுகின்றது.இதுகுறித்து டி.கே மார்க்கெட் அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘கோவை டி.கே மார்க்கெட்டிற்கு நாள் ஒன்றுக்கு தற்போது 250 டன் வரை பெரிய வெங்காயம் வருகிறது. மகாராஷ்டிரா வகை பெரிய வெங்காயம் கிலோ ஒன்று ரூ.65 வரை விற்பனை செய்யப்படுகின்றது. மற்ற வகை பெரிய வெங்காயம் கிலோவிற்கு ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகின்றது’’ என்றார்.

Related Stories:

>