×

குமரியில் சாரல் மழை நீடிப்பு

நாகர்கோவில், அக்.30: குமரி மாவட்டம் முழுவதும் சாரல் மழை மீண்டும் பெய்ய தொடங்கியுள்ளது.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த சாரல் மழை ஓய்ந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்பட்டது. நேற்று காலை வரை அதிகபட்சமாக அடையாமடை பகுதியில் 29 மி.மீ மழை பெய்திருந்தது.பெருஞ்சாணியில் 27.4, சிற்றார்-2ல் 5, மாம்பழத்துறையாறு 3, ஆனைக்கிடங்கு 5, புத்தன் அணை 26.6, நாகர்கோவில் 28.2, பூதப்பாண்டி 7.6, சுருளோடு 50.8, கன்னிமார் 1.8, ஆரல்வாய்மொழி 20, பாலமோர் 8.4, மயிலாடி 4.2, கொட்டாரம் 3.8 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.

நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.30 அடியாகும். அணைக்கு 534 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 720 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 71.05 அடியாகும். அணைக்கு 308 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 450 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.சிற்றார்-1ல் 14.96 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. அணைக்கு 12 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-2ல் 15.05 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. 13 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பொய்கையில் 17 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 53.15 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது.

Tags : Kumari ,
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...