சிவகிரியில் தொடர் மழையால் வீடு இடிந்தது

சிவகிரி, அக். 30: தொடர்மழையால் சிவகிரியில் கூலி தொழிலாளியின் வீடு இடிந்தது. வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கனமழை பெய்தது. 27ம்தேதி மட்டும் 87 மி.மீ. மழை பதிவானது. நேற்று சாரல் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று மாலையில் சிவகிரி கீழமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி பாபுகுட்டி என்பவரது வீடு திடீரென இடிந்து விழுந்தது.

அப்போது அவரது மனைவி முனியம்மாள் மற்றும் குடும்பத்தினர் வெளியே சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தவகலறிந்த சிவகிரி தாசில்தார் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், கிராம நிர்வாக அலுவலர் வீரசேகர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாபுகுட்டி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். அவர்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க தாசில்தார்ஆனந்த் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.

Related Stories:

>