×

ஆலங்குளத்தில் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

ஆலங்குளம், அக். 30: விவசாயிகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஆலங்குளத்தில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் நகர தலைவர் தங்க செல்வம் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் அருமைநாயகம் முன்னலை வகித்தார். அகில இந்திய விவசாய அணி துணைத்தலைவர் ராமசுப்பு, மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பழனிநாடார் ஆகியோர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

மாநில பேச்சாளர் பால்துரை, பாப்பாக்குடி வட்டார தலைவர் அரிநாராயணன், மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, நகர துணை செயலாளர் கோவில்பிள்ளை, அரவிந்த், மாவட்ட பொது செயலாளர் கணேசன், வட்டார காங்கிரஸ் செயலாளர் தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Congress ,Alangulam ,
× RELATED எய்ட்ஸ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்