×

₹1.66 கோடியில் சிறுபாலம் அமைக்க கலெக்டர் ஆய்வு போக்குவரத்து நெரிசல் குறைக்க நடவடிக்கை நேஷனல் சந்திப்பு- சர்வீஸ் சாலை இடையே

வேலூர், அக்.30:வேலூர் நேஷனல் சந்திப்பு- சர்வீஸ் சாலை இடையே ₹1.66 கோடியில் சிறுபாலம் அமைக்க கலெக்டர் சண்முகசுந்தரம் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தார்.
வேலூர் நேஷனல் சந்திப்பு அருகில் இருந்து தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை செல்லும் வழியில் 10 மீட்டர் அகலத்தில் சிறுபாலம் உள்ளது. இந்த பாலம் பழுதடைந்துள்ளதால் அதை சீரமைக்க கோரிக்கைப்பட்டது. இந்த சிறுபாலத்தை மாற்றி 20 மீட்டர் அகலத்தில் விரிவாக்கம் செய்து சற்று பெரிதாக சிறுபாலம் கட்டுவதற்காக ₹1.66 கோடி நிதியை நெடுஞ்சாலைத்துறை ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் சிறுபாலம் அமைய உள்ள இடத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் சங்கரன், பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.அப்போது, சிறுபாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால் அங்கு செல்லும் குடிநீர் பைப்லைன், மின்கம்பங்களை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து மின்கம்பங்களை அகற்றி சிறுபாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் எனவும், அதேபோல் சர்வீஸ் சாலையில் மழைநீர் கால்வாய் சிலாப்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதனை அகற்றி தரைமட்ட அளவில் கால்வாய் அமைக்கப்படும் என கலெக்டரிடம் அதிகாரிகள் விளக்கினர்.

தொடர்ந்து அப்துல்லாபுரம் விமான நிலையத்தில் மூடப்பட்டுள்ள ஆசனாம்பட்டு-அப்துல்லாபுரம் சாலைக்கு பதிலாக மாற்றுச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு ெசய்தார். அப்போது பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது உதவி கோட்ட பொறியாளர்கள் அண்ணாமலை, சுகந்தி, தாசில்தார்கள் ரமேஷ், சரவணன்முத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags : Collector Inspection ,National Junction- Service Road ,
× RELATED போளூர் ஒன்றியத்தில் ₹1 கோடியில் வளர்ச்சிப் பணிகள் கூடுதல் கலெக்டர் ஆய்வு