உத்திரமேரூர் அருகே கல்குவாரியில் 150 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே கல்குவாரியில் உள்ள 150 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.உத்திரமேரூர் அடுத்த சிறுதாமூர் கிராமத்தில் தனியார் கல்குவாரி இயங்குகிறது. இங்கு அப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் வேலை பார்க்கின்றனர். கிலக்காடி கிராமத்தை சேர்ந்த கோதண்டன் (40) என்பவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோதண்டன், கல்குவாரியில் இருந்து லாரியில், கற்களை ஏற்றி கொண்டு புறப்பட்டார். அப்போது, திடீரென தாறுமாறாக ஓடிய லாரி, கல்குவாரியில் உள்ள  150 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் கற்களுக்கு இடையே சிக்கிய கோதண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்து சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>