×

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உலக பக்கவாத நோய் தின விழிப்புணர்வு கருத்தரங்கு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உலக பக்கவாத நோய் தின விழிப்புணர்வு  கருத்தரங்கு நேற்று நடந்தது மருத்துவமனை மருத்துவ அலுவலர் அனுபாமா  தலைமை வகித்தார். நரம்பியல் மருத்துவர் பாலாஜி முன்னிலை வகித்தார். டீன் சாந்திமலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது, சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, வாய் குழறுதல், கை, கால்கள் மரத்து போகுதல் ஆகிய குறைபாடுகள்  தென்பட்டால், அது பக்கவாதத்துக்கான அறிகுறிகள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால்,  உடனடியாக மருத்துவமனையை அணுகி, மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று ஆரம்ப காலத்திலேயே சிகிச்சை பெற வேண்டும். இதன்மூலம் பக்கவாதத்தை முழுமையாக குணப்படுத்த முடியும் என்றார். இதில், மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் ஹரிகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்


Tags : World Stroke Day Awareness Seminar ,Chengalpattu Government Hospital ,
× RELATED 4 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து...