×

சோழவரம் அருகே சாலையை ஆக்கிரமித்து போடப்பட்ட கடைகள் அகற்றம்: நெடுஞ்சாலை துறையினர் அதிரடி

புழல்: சோழவரம் அருகே சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகளை நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சோழவரம் ஜி.என்.டி சாலை முதல் காரனோடை மேம்பாலம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இரண்டு பக்கங்களிலும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், நடைபாதை கடைகள் மற்றும் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு  செய்திருந்தனர். இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். சில நேரங்களில் விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன.

எனவே இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாநில நெடுஞ்சாலை துறையினருக்கு பலமுறை புகார் தெரிவித்திருந்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் நேற்று நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள் மற்றும் தடுப்புகள், நடைபாதை கடைகள் ஆகியவற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பணி  இரண்டு, மூன்று நாட்கள் வரை நடைபெறும். இச்சாலையை ஆக்கிரமித்து யாராவது இனி  கடைகள் கட்டினால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.  

Tags : Highway Department Action ,shops ,road ,Cholavaram ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி