செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியது

புழல்: செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட  ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் அலுவலக நேரத்தை தவிர்த்து இரவு நேரங்களிலும் பத்திர பதிவுகள் அத்துமீறி நடப்பதாகவும்  லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறுவதாகவும் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று மாலை சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி லவக்குமார் தலைமையிலான போலீசார் மாடியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று அதிரடி சோதனை செய்தனர். மேலும், அங்கு பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென வந்ததால் அலுவலகத்தை ஒட்டி உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட புரோக்கர் அலுவலகங்களை அதிரடியாக மூடி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். முன்னதாக இவர்கள் வருவதை கண்ட பத்திரப்பதிவு அலுவலர்கள் அவர்களது கார் டிரைவர் மற்றும் உதவியாளர், புரோக்கர்களிடம் லஞ்சப்பணத்தை கொடுத்து அனுப்பி விட்டதாக தெரிகிறது. அதிகாரிகள் ரெய்டு நடத்தி வரும் வேளையில் பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் ஊழியர்கள் இரவு நேரத்திலும் கையெழுத்து பெற்று வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.  10 ஆண்டுகளுக்கு பிறகு இதே அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>