×

டாஸ்மாக் நாளை விடுமுறை

சென்னை: மிலாது நபி தினத்தை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கக் கூடாது என சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி கூறியதாவது: மிலாது நபி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், கிளப் மற்றும் அதனை சார்ந்த பார்கள், ஓட்டல்கள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், FL11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Tags : Tasmac ,
× RELATED திண்டுக்கல் அருகே மது விற்ற 7 பேர் கைது