×

வேளச்சேரி துணை மின்நிலைய மின் இணைப்புகள் மாற்றம்: வாரியம் அறிவிப்பு

சென்னை: வேளச்சேரி துணை மின்நிலையத்தில் உள்ள மின் இணைப்புகள் நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வேளச்சேரி, விஜய நகரில் 110/33/11 கிவோட் துணைமின் நிலைய வளாகம் உள்ளது. இங்கு செயல்பட்டு வரும் கிழக்கு, மைய, மேற்கு உதவி மின்பொறியாளர் அலுவலகங்களில் மின் இணைப்புகள் நிர்வாக காரணங்களுக்காக 1.11.20 முதல் பிரிக்கப்படுகிறது. அதன்படி கிழக்கு பிரிவிலிருந்து மைய பிரிவிற்கு காந்திரோடு,  ராஜா தெரு, நியூ காலனி, பாரதியார் தெரு, வள்ளலார் தெரு, தண்டபாணி தெரு, சீதாபதி நகர், 1, 2, 3, 4வது தெரு, ராணி தெரு, ஜெயந்தி தெரு, அமுதா தெரு, பாரதி தெரு, ரவி தெரு, கம்பர் தெரு ஆகியவை செல்கிறது.

மேற்கு பிரிவிலிருந்து கிழக்கு சாரதி நகர், சீதாராம் நகர், புவனேஸ்வரி நகர், விஜிபி நகர், 100வது மெயின் ரோடு, பேராமவுண்டு அடுக்குமாடி, ரமணியம் அடுக்குமாடி, கதிரவன் நகர், சுப்பிரமணி காலனி செல்கிறது. இந்த மாற்றத்தினால் மின்நுகர்வோர்கள் பணம் செலுத்தும் தேதியில் மாற்றம் எதுவும் இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Velachery ,
× RELATED வேளச்சேரி துணை மின்நிலைய மின் இணைப்புகள் மாற்றம்: வாரியம் அறிவிப்பு