×

தூத்துக்குடி போல்பேட்டையில் ஜீவன் கிளினிக் திறப்பு விழா

தூத்துக்குடி, அக். 29: தூத்துக்குடி போல்பேட்டையில் ஜீவன் கிளினிக் திறப்பு விழா நடந்தது.  தூத்துக்குடி  போல்பேட்டை மேற்கில் கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகே பெரியசாமி கல்வி  அறக்கட்டளை சார்பில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ஜீவன் கிளினிக்  திறப்பு விழா நடந்தது. பரி. பேட்ரிக் இணை பேராலாய குருவானவர்  யோபு ரத்தினசிங் ஜெபம் செய்து விழாவைத் துவக்கிவைத்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற சுந்தரி ஸ்டெல்லா, எபனேசர் பெரியசாமி புதிய கிளினிக்கை திறந்துவைத்தனர்.

 விழாவில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்.ஏ., தி,மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி,  பெரியசாமி கல்வி அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்ட்டி ஜீவன்ஜேக்கப், டிரஸ்ட்  உறுப்பினர்கள் சுதன்கீலர், சுதா சுதன், அமலாஜேன், டாக்டர் ஜெயகரன், மாநகர  திமுக செயலாளர் ஆனந்தசேகரன், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், கீதா  முருகேசன், ராஜாமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  ஏற்பாடுகளை டாக்டர்கள்.மகிழ்ஜான் சந்தோஷ், அபிஷேக்ஜெரி சந்தோஷ், ஹன்ஸன் பெரி சந்தோஷ்  செய்திருந்தனர்.

Tags : Jeevan Clinic Opening Ceremony ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பெண் பலி