×

ஏரியில் மூழ்கி நேபாள சிறுமிகள் 2 பேர் பலி போளூர் அருகே பரிதாபம்

போளூர், அக்.29: போளூர் அருகே ஏரியில் மூழ்கி நேபாள சிறுமிகள் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். நேபாள நாட்டை சேர்ந்தவர் தீபக் சிங்(43). இவரது மனைவி சீதா சிங். இவர்களுக்கு 7 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள், கடந்த 2008ம் ஆண்டு முதல் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த பெரியகரம் கிராமம் பெரிய ஏரி அருகே குடிசை கட்டி வசித்து வருகின்றனர். தீபக் சிங் இரவு காவலாளியாக வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், நேற்று மாலை இவர்களது 2வது மகள் சாந்தி(11), 5வது மகள் பகவதி(8) ஆகிய 2 பேரும், வீட்டின் பின்புறம் உள்ள ஏரிக்கு சென்றனர். அங்கு ஆழமான பகுதிக்கு சென்ற சிறுமிகள், எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

இதனை தூரத்தில் இருந்து பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், உடனடியாக கிராம மக்கள் மற்றும் தீபக் சிங்கிற்கு தகவல் ெதரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், 2 பேரையும் சடலமாகவே மீட்க முடிந்தது. தகவலறிந்த போளூர் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Nepali ,girls ,lake ,Polur ,
× RELATED போச்சம்பள்ளி அருகே 2 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்