×

ஆபத்தை உணராத பயணிகள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் பாஜகவினர் 250 பேர் மீது வழக்கு.

திருச்சி, அக். 29:பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தடையை மீறி நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திருச்சியில் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியாக மகளிர் அணி மாவட்ட தலைவர் புவனேஸ்வரி, எஸ்சி அணி மாவட்ட தலைவர் பாஸ்கர், மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், மாநில மகளிர் அணி செயலாளர் லீமாசிவகுமார் உள்பட 250 பேர் மீது கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : BJP ,
× RELATED மாலேகான் வெடிகுண்டு வழக்கு பாஜ எம்பி பிரக்யா ஆஜராகவில்லை