×

பந்தல் அமைக்க மக்கள் கோரிக்கை பயிர்களில் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து செயல்விளக்க பயிற்சி


மன்னார்குடி, அக். 29: பாலையகோட்டை பராசபுரத்தில் விவசாயிகளுக்கு பயிர்களில் பரவும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து செயல்விளக்க பயிற்சி நடைபெற்றது. கோட்டூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தின் சார்பில் அட்மா தொழிற் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் சம்பா சாகுபடி பயிர்களில் பரவும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு நேரடி செயல் விளக்க பயிற்சி முகாம் திருமக்கோட்டை அருகில் பாலையக்கோட்டை பராசபுரம் ஊராட்சியில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, கோட்டூர் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன் தலைமை வகித்து விவசாயிகளுக்கான செயல் விளக்க பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். பயிற்சி முகாமில், தற்போது நடவு செய்யப்பட்டுள்ள பயிர்களில் இலைஅழுகல், ஆனைக்கொம்பன் நோய் மற்றும் பல்வேறு வகையான நோய்களின் தாக்குதல் களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ராதாகிருஷ்ணன் விவசாயிகளிடம் விளக்கமாக எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற கோட்டூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் தங்கபாண்டியன் பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு செவ்வந்தி பூச்செடிகளை வழங்கி அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விரிவாக எடுத்துக்கூறி பேசினார். பயிற்சி முகாமில், ஒன்றியக்குழு உறுப்பினர் சரண்யா, பாலையக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி மலர்வண்ணன், பூச்சியியல் துறை வட்டார தொழிற்நுட்ப மேலாளர் சீனிவாசன், உதவி தொழிற்நுட்ப மேலாளர்கள் கவிப்பிரியா, அருள் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...