×

சாலையில் வாகனங்களை நிறுத்துவதால்

ஒரத்தநாடு, அக். 29: ஒரத்தநாடு கடைத்தெருவில் வாகனங்களை நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரண்மனை கடைத்தெருவில் உணவு விடுதிகள், மெடிக்கல் ஷாப்கள், தேநீர் விடுதிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள கடைகளுக்கு ஒரத்தநாடு சுற்றுவட்டார பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வந்து தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி செல்வர்.

ஒரத்தநாடு கடைத்தெருவுக்கு வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்கள், கார்களை சாலையிலேயே நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இந்த சாலையில் செல்லும் பஸ், லாரி, கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனால் பேருந்துகளில் செல்லும் பொதுமக்கள், கடைத்தெருவுக்கு வரும் மக்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ஒரத்தநாடு கடைவீதிக்கு பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இதனால் கடைத்தெருவில் மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகியுள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே ஒரத்தநாடு கடைத்தெருவில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்த கூடுதலாக போக்குவரத்து போலீசாரை நியமனம் செய்ய வேண்டும். கடைத்தெருவில் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடைத்தெருவில் வாகன நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...