×

பொதுமக்கள் அவதி 57,736 வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் வரை வருங்கால வைப்பு நிதியில் ரூ.8.61 கோடி செலுத்தல்

தஞ்சை, அக். 29: தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஈஸ்வரி நகரில் செயல்பட்டு வந்த வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகம், பாண்டியன் நகர் கூட்டுறவு அச்சகம் முன்பு உள்ள கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை திறப்பு விழா நேற்று நடந்தது. புதிய அலுவலகத்தை தமிழ்நாடு கூடுதல் மத்திய தொழிலாளர் நல நிதி ஆணையர் மதியழகன் திறந்து வைத்தார். கோவை மண்டல தொழிலாளர் நிதி ஆணையர் முத்துச்செல்வன், திருச்சி மண்டல தொழிலாளர் நல ஆணையர் வன்ல்முவன் பங்கேற்றனர். இதைதொடர்ந்து மதியழகன் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா காலத்தில் மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான தொழிலாளர் வைப்பு நிதி கோரிக்கைகள், பண பலன்கள் குறித்து 97 சதவீதம் வரை தீர்க்கப்பட்டுள்ளது.  

திருச்சி மண்டலத்தை பொறுத்தவரை திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் இருந்து 14,05,369 வருங்கால வைப்பு நிதி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.  இவர்கள் மூலம் ரூ.79 கோடி மாத சந்தா செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் வருங்கால வைப்புநிதியில் பணம் செலுத்த முடியாத வாடிக்கையாளர்களில் ரூ.15 ஆயிரத்துக்கு கீழ் சம்பளம் வாங்கும் 57,736 வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரை அவர்களின் வருங்கால வைப்பு நிதியில் ரூ.8.61 கோடி செலுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஒரத்தநாடு கடைத்தெருவில் கடும் போக்குவரத்து நெரிசல் தமிழ்நாடு கூடுதல் மத்திய தொழிலாளர் நல நிதி ஆணையர் தகவல் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ஒரத்தநாடு கடைவீதிக்கு பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் கடைத்தெருவில் மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

Tags : customers ,
× RELATED போலி ஆவணங்கள் தயாரித்து 3...