×

புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்

புதுக்கோட்டை, அக். 29: புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். புதுக்கோட்டை நகராட்சியில் பணி புரியும் டெங்கு தடுப்பு பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: நாங்கள் பத்தாண்டுகளாக புதுக்கோட்டை நகராட்சியில் நன் முறையில் பணியாற்றி வருகிறோம். ஒரு சமயத்தில் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் ஒரு வார காலம் வேலைக்கு வரவில்லை. அந்த சமயத்தில் டெங்கு பணியாளர்களை வைத்துதான் 42 வார்டுகளிலும் துப்புரவு பணி செய்தார்கள். அதேபோல் கஜா புயல் நேரத்திலும் 42 வார்டுகளிலும் டெங்கு பணியாளர்கள் தான் வேலை செய்தார்கள்.

தற்போது கொரோனா சமயத்தில் உயிரை பணையம் வைத்து 42 வார்டுகளிலும் வீடு வீடாக சென்று ஒவ்வொரு பகுதியிலும் சர்வே எடுத்து, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இதற்காக சிறப்பு ஊதியம் ஒரு மாத சம்பளம் தருவதாக கூறினார்கள். ஆனால் அதை கொடுக்கவில்லை. மேலும் ஜூலை மாதம் வேலை பார்த்த சம்பளமும் கொடுக்கவில்லை. சம்பளமும் வேலையும் கேட்டால் கொடுக்க முடியாது என்று தற்போது உள்ள ஆணையர் கூறுகிறார். ஆகவே எங்களுக்கு ஜூலை மாத சம்பளமும் சிறப்பு ஊதியம் மற்றும் டெங்கு போனஸையும் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர்.

Tags : dengue prevention workers ,municipality ,Pudukkottai ,
× RELATED திருப்பத்தூர் நகராட்சியில் பரபரப்பு...