×

திருநள்ளாறில் சனி பெயர்ச்சி விழா ஆலோசனை கூட்டம்

காரைக்கால், அக்.29: காரைக்கால் திருநள்ளாற்றில் வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும், சனி பெயர்ச்சி விழா குறித்து, ஆலோசனை கூட்டம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. காரைக்கால் திருநள்ளாறு  தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வரும் சனிபகவான் கோவிலில், இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா, வரும் டிசம்பர் 27ம் தேதி காலை 5.22 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியின் போது, சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகரராசிக்கு இடம் பெயரவுள்ளார். இதையே சனிப்பெயர்ச்சி விழா என்கிறோம். இந்த சனிப்பெயர்ச்சி விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், விழா குறித்து, முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கோயில் அலுவலகத்தில் நடைபெற்ற, இந்த ஆலோசனை கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா தலைமை வகித்தார். கோயில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ், துணை கலெக்டர் பாஸ்கரன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடந்த பல மாதமாக கொரோனா தொற்று அனைவரையும் வாட்டி வதைப்பதால், அதிகப்படியான கூட்டம் கூடுவதென்பது முடியாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில், விழாவில், பக்தர்களை எவ்வாறு சிரமம் இன்றி அனுமதிப்பது என்பது குறித்தும், அவர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Tags : Saturn ,shift ceremony consultation meeting ,Thirunallar ,
× RELATED திருநள்ளாறில் சனி பெயர்ச்சிக்கு முன்னதாக ஆன்மிக பூங்கா திறக்கப்படும்