×

அதிகாலை நேரங்களில் அதிக பனி பொழிவு தமிழக கவர்னரை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் 60 பேர் கைது


நாகை,அக்.29: மருத்துவ படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக ஆளுநரை வெளியேற கோரி நாகை அபிராமி அம்மன் சன்னதி தெருவில் ஆர்ப்பாட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 40 பெண்கள் உட்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் பாபுகான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அபுஹாசிம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சேக்அலாவுதீன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். எஸ்டிடியூ மாவட்ட தலைவர் சாதிக், மண்டல செயற்குழு உறுப்பினர் சலீம், பெண்கள் பிரிவு மாவட்ட தலைவர் பஷீராகனி, பொதுச்செயலாளர் சுலைகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவக்கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளி யேறக்கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகை நகரச் செயலாளர் மெய்தீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர், நாகை நகரத்தலைவர் பகுருதீன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டம் முடிவில் டிஎஸ்பி முருகவேலு தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 40 பெண்கள் உட்பட 60 பேரை கைது செய்து நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.

Tags : arrests ,STPI ,protest ,Tamil Nadu ,
× RELATED பண பலத்தை நம்பி தேர்தலில் நிற்கும் பாஜ: -எஸ்டிபிஐ தலைவர்