×

கரூர் ராயனூர் பகுதியில் மோசமான சாலைகளை தரம் உயர்த்த வலியுறுத்தல்


கரூர், அக். 29: கரூர் ராயனூர் பகுதியில் பெரும்பாலான உட்பகுதிக்கான சாலைகள் தார்ச்சாலைகளாக மாற்ற வேண்டும் என பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர் தாந்தோணிமலையில் ராயனூர் பகுதி உள்ளது. தாந்தோணிமலை பகுதிக்கு நிகராக ராயனூர் பகுதியில் அதிகளவு குடியிருப்புகள் உள்ளன. இதில், ராயனூர் பகுதியில் இருந்து எம்ஜிஆர் நகர் போன்ற பல்வேறு நகர்ப்பகுதிகளுக்கான சாலை உள்ளது. இதில், சில சாலைகள் பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலைகளை தரம் உயர்த்தி தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது. எனவே, சில நகர்ப்பகுதிகளுக்கு செல்லும் மோசமான நிலையில் உள்ள சாலைகளை தார்ச்சாலைகளாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு தேவையான பகுதிகளில் சாலைகளை தரம் உயர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : roads ,area ,Karur Rayanoor ,
× RELATED கனமழை எதிரொலியால் குண்டும், குழியுமாக மாறிய ரோடுகள்