×

கரூர் சின்னாண்டாங்கோயில் சாலையில் பழுதான டிரான்ஸ்பார்மர் சீரமைக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

கரூர், அக்.29: கரூர் சின்னாண்டாங்கோயில் சாலையில் பழுதடைந்த நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் சரி செய்யப்பட வேண்டும் என இந்த பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூரில் இருந்து சின்னாண்டாங்கோயில், பெரியார் வளைவு போன்ற பகுதிகளுக்கு பிரதான சாலை உள்ளது. வர்த்தக நிறுவனங்களும், குடியிருப்புகளும் இந்த சாலையில் உள்ளன. இதில், சின்னாண்டாங்கோயில் பிரதான சாலையோரம் கடந்த சில மாதங்களாக பழுதடைந்த நிலையில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. சிமெண்ட் துகள்கள் விரிசல் அடைந்து ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதனை மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை மாற்ற தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : transformer ,Karur Chinnandangoil Road ,
× RELATED தென்மேல்பாக்கம் கிராமத்தில் எலும்பு...