×

வாலிபருக்கு வலை க.பரமத்தி சடையீஸ்வர சுவாமி கோயிலில் அன்னாபிஷேக விழா

க.பரமத்தி, அக்.29: க.பரமத்தி சவுந்தரநாயகி உடனமர் சடையீஸ்வர சுவாமி கோயிலில் நாளை (30ம்தேதி) அன்னாபிஷேக விழா நடைபெறுகிறது. க.பரமத்தி சவுந்தரநாயகி உடனமர் சடையீஸ்வர சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாத பவுர்ணமியன்று அன்னாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இதன்படி கோயிலில் நாளை (30ம்தேதி) மாலை 7மணி முதல் எண்ணெய், அரிசி, மஞ்சள் பொடி, பால், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்ன அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. இங்குள்ள சடையீஸ்வர சுவாமி லிங்கத்திற்கு மூட்டை அரிசியை அன்னமாக்கி அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை நடத்தப்படுகிறது பின்னர் அன்னம் பிரித்தெடுத்து கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

இது குறித்து சிவனடி பக்தர் கல்யாணசுந்தரம் கூறுகையில், அன்னாபிஷேகமானது ஆண்டு தோறும் நடத்தப்படுவதாகும். ஆகாயத்தில் பிறந்த காற்று துணையுடன் தீ எரிகிறது. தீயில் நீரும், நீரில் நிலமும் பிறக்கின்றன. நிலத்தில் விளைந்த அரிசி, நீரில் மூழ்கி, தீயால் வெந்து அன்னமாகிறது. எனவே அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையாகும் அன்னஅபிஷேகமாக படைக்கும் போது ஆண்டவன் முழுவதும் அனைத்தும் தழுவிக் கொள்கிறது. அவனிடமே அடைக்கலமாகிறது. இதன்மூலம் ஐம்பெரும் பூதங்களும் ஆண்டவனிடம் அடைக்கலம். அன்னாபிஷேகத்தில் சிவலிங்கத்தின் மீதுள்ள ஒவ்வொரு சோற்று பருக்கையும் ஒவ்வொரு சிவலிங்கமாக காட்சியளிப்பதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. அன்னாபிஷேகம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை தரிசனம் செய்வதன் மூலம் ஒரே சமயத்தில் பல நூறு சிவலிங்கங்களை தரிசனம் செய்த பலன் கிட்டும் என்பது ஐதீகம். பயிரிடும் போதும், சமைக்கும் போதும், சாப்பிடும் போதும் நல்லதையே சிந்தித்தால் நாம் சாப்பிடும் சாப்பாடே இறைவன் பிரசாதமாகி விடுகிறது என்றார்.

Tags : ceremony ,Annabhishekam ,teenagers ,K. Paramathi Sadayeswara Swamy Temple ,
× RELATED வருடாபிஷேக விழா