×

திறந்தவெளியில் குப்பை கொட்டினால் அபராதம்

உடுமலை, அக். 29:  உடுமலை நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நகராட்சி பகுதியில் சுமார் 16 ஆயிரம் வீடுகளும், 4 ஆயிரம் வணிக நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் 23 மெட்ரிக் டன் அளவுக்கு குப்பைகள் உருவாகிறது. இதனை நகராட்சி பணியாளர்கள் மூலம் வீடுகள் மற்றும் கடைகளில் நேரடியாக சேகரிக்கப்படுகிறது. இருப்பினும் பொதுமக்கள் சிலரின் ஒத்துழைப்பின்மையால் ஆங்காங்கே திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் நகரின் பொது சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது.

எனவே, திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தடுக்க அந்தந்த பகுதி தன்னார்வலர்களை கொண்டு சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சிசிடிவி  கேமரா மூலமும் கண்காணிக்கப்படுகிறது.எனவே, குப்பைகளை திறந்தவெளியில் கொட்டாமல் நகராட்சி பணியாளர்களிடம் மட்டுமே வழங்க வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ன்படி குப்பைகளை உருவாக்குபவரே மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். நகரின் சுகாதாரம் மேம்பட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கால தாமதமாக அப்பீல் மனுதாக்கல் கல்வி அதிகாரிகளுக்கு அபராதம்