×

பழங்குடியின மக்களுக்கு கோழி குஞ்சுகள் விநியோகம்

ஊட்டி, அக். 29: நாவா அமைப்பு சார்பில் பழங்குடியின மக்களுக்கு 2 ஆயிரம் கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு அருகேயுள்ள கேம்ப்பாடி, லைட்பாடி மற்றும் தேக்குபாடி உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளும் வகையில் நீலகிரி ஆதிவாசிகள் நல சங்கத்தின் (நாவா) சார்பில் சைல்ட் நிதி திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் மதிப்பில் கொழிகுஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி தெப்பக்காட்டில் நடந்தது. நாவா செயலாளர் ஆல்வாஸ் தலைமை வகித்தார். இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு தலா 25 கோழி குஞ்சுகள் வீதம் 2 ஆயிரம் கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பழங்குடியினர் கைவினை பொருட்கள் விற்பனை மையம் துவக்கி வைக்கப்பட்டது. பின்னர் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தெப்பக்காடு வனச்சரகர் விஜய் மற்றும் மதிவாணன், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...