×

ஆசிரியர் பணி நியமன வயது வரம்பு அரசாணையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

ஈரோடு, அக். 29:  ஆசிரியர் பணி நியமன வயது வரம்பை 40 ஆக குறைத்து வெளியிட்ட அரசாணைகளை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோட்டில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் லூர்துபெலிக்ஸ் ஸ்டீபன் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணி, மாரிச்சாமி, தேவராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் மலர்விழி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில், அனைத்து நிலை ஆசிரியர்களும் பெற்று வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்த அரசாணை எண் 116,37 ஆகியவற்றை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். உயர்கல்வி பயின்றதற்கான பின்னேற்பு ஆணைகளை உடனடியாக வழங்கப்பட வேண்டும். ஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது 40 ஆக குறைத்து, தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள விதித்திருத்தம், அரசாணைகளை அரசு திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Demonstration ,teachers ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்