×

திருமங்கலம் அரசு சித்த மருத்துவமனையில் 8 வடிவ வர்ம நடைபாதை அமைப்பு பொதுமக்கள் வரவேற்பு

திருமங்கலம், அக். 28: திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவமனை பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். தற்போது கொரோனா காலமாக இருப்பதால் பலரும் நடைபயிற்சி போவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் வசதி படைத்த ஒருசிலர் தங்களது வீடுகளில் 8 வடிவில் நடைபாதை அமைத்து அதில் நடந்து செல்கின்றனர். இந்த வசதிகள் இல்லாதவர்களின் வாட்டத்தை போக்கும் வகையில் திருமங்கலம் அரசு சித்த மருத்துவமனையில் 8 வடிவ வர்ம நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து சித்த மருத்துவமனை டாக்டர் முத்து கூறுகையில், ‘நமது உடலில் உள்ள முக்கிய உள்உறுப்புகளை கட்டுப்படுத்தும் வர்மப்புள்ளிகள் நமது உள்ளங்கால்களில் அமைந்துள்ளது.

கூழாங்கற்கள் பதிக்கப்பட்ட இந்த 8 வடிவ வர்ம நடைபாதையில் நடைபயிலும் போது இந்த வர்மபுள்ளிகள் சீரான அழுத்தம் பெறும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நடக்கலாம்.  கர்ப்பிணிகள், புற்றுநோய் பாதித்தவர்கள், சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் நடக்ககூடாது. மேலும் செருப்பு அணியாமல் அதிவேகமாகவோ, மிகவும் மெதுவாகவோ நடக்காமல் சீரான இயல்பு நடை நடக்க வேண்டும். சாப்பிட்ட பின்பு ஒன்றரை மணிநேரம் கழித்து நடப்பதுடன், குறைந்தது 20 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் அரைமணி நேரம் வரையில் நடக்கலாம். வளைந்து வளைந்து நடப்பதால் நமது வலது, இடது மூளை பகுதிகள் ஒரே நேரத்தில் தூண்டப்படுவதால் மூளைக்கு புத்துணர்ச்சி சிந்திக்கும் திறன், ஞாபகசக்தி அதிகரிக்கும். உடலில் இளமை நீடிக்கும். ரத்த ஓட்டம் சீராகும், சர்க்கரை நோய், அதி

Tags : reception ,Thirumangalam Government Siddha Hospital ,Varma ,
× RELATED ஏப்ரல் 5 முதல் ஓடிடியில், “ஹனுமன்” திரைப்படம் !!