×

முருங்கை விலை ‘கிடுகிடு’

ஒட்டன்சத்திரம், அக். 28: ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு முருங்கை வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளது. ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி, கேதையுறம்பு, கள்ளிமந்தையம், அம்பிளிக்கை, கரியாம்பட்டி, தேவத்தூர், இடையகோட்டை ஆகிய பகுதிகளில் விவசாயிகள் முருங்கையை பயிரிட்டுள்ளனர். இப்பகுதியில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சி மற்றும் போதிய மழையின்மையால் முருங்கை வரத்து குறைத்துள்ளது. கடந்த மாதங்களில் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் முருங்கை ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையானது. தற்போது ஒரு கிலோ கரும்பு முருங்கை ரூ.53, செடிமுருங்கை ரூ.38, உடன்குடி முருங்கை ரூ.47 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Tags :