×

முதுகுளத்தூர் பகுதியில் மூன்றே நாளில் பழுதடைந்த சிக்னல்

சாயல்குடி, அக்.28:   முதுகுளத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தாலுகா, யூனியன் தலைமையிடமாக உள்ளது. 200க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வர்த்தகம், அலுவலகங்கள், மருத்துவமனை வந்து செல்கின்றனர்.   இந்நிலையில் கடலாடி விலக்கு, தேரிருவேலி விலக்கு, அபிராமம் விலக்கு போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் சாலை பாதுகாப்பு, பொதுமக்கள் நலன் கருதி முதுகுளத்தூர் காவல்துறை சார்பில் தேவையான இடங்களில் பேரிக்கார்டு தடுப்புகள், ஒளிரும் சிக்னல் போன்றவை பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டு, அதனை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி அக்.23ம் தேதி எஸ்.பி கார்த்திக் தலைமையில் தடல்புடலாக நடந்தது. ஆனால் துவக்கி வைக்கப்பட்டு மூன்றே நாள் ஆன நிலையில் கடலாடி சாலையிலிருந்து முதுகுளத்தூர் நுழைவு பகுதியில் வைக்கப்பட்ட ஒளிரும் விளக்கு எரியாமல் அணைந்து கிடக்கிறது.

இதனை போன்று சமூக ஆர்வலர்களால் வழங்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட பேரிகார்டு தடுப்புகள் சாலையில் வைக்காமல் பஸ் ஸ்டான்டில் உள்ள புறக்காவல்நி லையம் முன்பு குவித்து வைக்கப்பட்டுள்ளது.
முதுகுளத்தூரில் வாரந்தோறும் சந்தை நடத்தப்படுகிறது. இதனால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் பஜார், பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பகல் நேரங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிமாக உள்ளது.
அந்த இடத்தில் 10க்கும் மேற்பட்ட பேரிகார்டுகளை குவித்து வைத்திருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலை பாதுகாப்பு, பொதுமக்கள் நலன் கருதி வழங்கப்பட்ட சாலை பாதுகாப்பு உபகரணங்களை முறையாக பயன்படுத்த எஸ்.பி கார்த்திக் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mudukulathur ,area ,
× RELATED கமுதி அருகே வேளாண் கல்லூரியில் மகளிர் தின விழா