×

அரசு அலுவலர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

ராமநாதபுரம், அக்.28:  ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் ‘லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி” எடுத்துக் கொண்டனர்.
நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் இன்றியமையாததாகும். இத்தகைய வெளிப்படையான சமுதாயத்தை உருவாக்குவதில் குடிமக்கள், அரசு மற்றும் தனியார் அமைப்புகள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதனை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டில் நேற்று முதல் 2.11.2020 வரையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதனடிப்படையில் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் பல்வேறு அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் கலெக்டர் தலைமையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கோபு, வீரகணபதி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


Tags : Government officials ,
× RELATED 3 அரசு உயரதிகாரிகள் மீது லஞ்ச வழக்கு