×

டிராக்டர் மோதி பெண் பலி

வருசநாடு, அக். 28: வருசநாடு அருகே மணலாத்துக்குடிசையை சேர்ந்த குருசாமி மனைவி லூர்து(55). ஈனர் அங்குள்ள சீலமுத்து என்பவருக்குச் சொந்தமான பலசரக்குக் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது வருசநாட்டிலிருந்து வாலிப்பாறை மலைக்கிராமத்தை நோக்கி ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த டிராக்டர் மணலாத்துக்குடிசை கிராமத்துக்கு சென்றபோது நிலைதடுமாறி லூர்து மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த லூர்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். வருசநாடு போலீசார் வழக்கு பதிந்து டிராக்டர் டிரைவர் கனியழகனை(50) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது