×

முல்லை பெரியாற்றில் இந்திய-திபெத் படையினர் தேனி போலீசாருக்கு பயிற்சி

தேனி. அக். 28: இந்திய - திபெத் எல்லை போலீஸ் பாதுகாப்பு படையினர், தேனி போலீசாருக்கு, ஆற்றுயை கடக்கும் பயிற்சி அளித்தனர். தேனி அருகே உள்ள முல்லைப் பெரியாற்றில், இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பு படையினர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த போலீசாருக்கு ஆற்றை கடக்கும் பயிற்சி உள்பட இயற்கை பேரிடர் பயிற்சிகளை நேற்று அளித்தனர். இப்பயிற்சி இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படை கமாண்டோ சஞ்சித் சிங் தலைமை வகித்தார். இதில் 90 வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

மாதிரி ஒத்திகையின்போது வாழைமரம், லைஃப் ஜாக்கெட், டியூப், காலிபாட்டில்கள், காலிகுடம், காலி சிலிண்டர், பிளாஸ்டிக் பந்து, கயிறு, மரங்களாலான படகு போன்றவற்றை பயன்படுத்தினர். பயிற்சியின்போது அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதவகையில் முதலுதவி பெட்டி மற்றும் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் தேனி தீயணைப்பு துறை நிலைய வீரர்கள் 10பேர் மற்றும் வீரபாண்டி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Indo ,troops ,Tibetan ,Theni ,Mulla Periyar ,
× RELATED நாமக்கல் அருகே தொழிலதிபர் வீட்டில்...