×

கிருஷ்ணகிரி அணைக்கு 1126 கனஅடி நீர்வரத்து

கிருஷ்ணகிரி, அக்.28: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் 1440 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 1230 கனஅடியாக சரிந்தது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் தற்போது 39.69 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து 1120 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல், கிருஷ்ணகிரி அணையின் மொத்த உயரமான 52 அடியில் நேற்று காலை நிலவரப்படி 49.20 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் தற்போது திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 1358 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1126 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து 1126 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால், ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Tags : Krishnagiri Dam ,
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி...