ஜல்லி கொட்டிய நிலையில் தார்சாலை பணிகள் நிறுத்தம்

திருச்செங்கோடு, அக்.28: திருச்செங்கோடு தாலுகா உஞ்சனை- நல்லிபாளையம் இடையே சாலை அமைக்க  ஜல்லிக்கற்கள் கொட்டிய நிலையில், ஒப்பந்ததாரர் பணியை நிறுத்தியதால் 2 மாதமாக மக்கள்  சிரமப்பட்டு வருகின்றனர். திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம், உஞ்சனை ஊராட்சியில் இருந்து  குட்டிக்காபாளையம் வழியாக, நல்லிபாளையம் ஊராட்சிக்கு செல்லும் பழைய தார்சாலையை அகற்றி விட்டு, புதிய தார்சாலை அமைக்க, கடந்த 2 மாதத்திற்கு முன்பே சாலை பறிக்கப்பட்டு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. ஜல்லிக்கற்கள் கொட்டிய ஒப்பந்ததாரர், சமன் செய்து தார்போடும் பணியை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டார்.

இதனால் இந்த சாலையில்  செல்ல முடியவில்லை. விவசாயிகள் உரம், பயிர்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு செல்ல முடியவில்லை. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனேவ, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>