×

செங்கோட்டையில் சுகாதார வளாகம் முகம்மது அபுபக்கர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

செங்கோட்டை, அக். 28: செங்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் புதிய சுகாதார வளாகத்தை முகம்மது அபுபக்கர் எம்எல்ஏ திறந்து வைத்தார். செங்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில், ரூ.9.55 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு முகம்மது அபுபக்கர் எம்எல்ஏ தலைமை வகித்து திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பணிமனை மேலாளர் முருகன், நகராட்சி ஆணையாளர் நித்யா, பொறியாளர் கண்ணன், சுகாதார அலுவலர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் மகேஸ்வரன், திமுக நகர செயலாளர் ரஹீம், ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஹக்கீம், மாவட்ட தொமுச நிர்வாகிகள் திவான்ஒலி, முத்துப்பாண்டி, நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சந்தோஷ், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், ஒன்றிய பிரதிநிதி கிருஷ்ணசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகள் பஷீர், சலீம், மற்றும் பணிமனை நிர்வாகிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Red Fort ,Mohammad Abubakar MLA ,
× RELATED சிங்கம்புணரி ஜிஹெச்சில் பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்