×

மிலாடி நபியை முன்னிட்டு 30ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

தென்காசி அக். 28 : வரும் 30 ஆம் தேதி மிலாடி நபி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு மதுபானக்கடைகள், மற்றும் மதுபானக் கூடங்கள் மூடப்படும் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:வரும் 30ம் தேதியன்று மிலாடி நபி அனுசரிக்கப்படும். இதனை முன்னிட்டு அரசு மதுபானக்கடைகள், அதனுடன் செயல்படும் மதுபானக் கூடங்கள், மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அனைத்தும் மேற்படி தினத்தில் மூடப்பட வேண்டும் என அரசு ஆணையிட்டுள்ளது.  அதன்படி தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் 30.10. 2020 அன்று ஒரு நாள் மட்டும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Holidays ,Milad ,stores ,Tasmag ,
× RELATED மிரட்டும் நிவர் புயல்; கடலூர்,...