×

குளத்தூர் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு

குளத்தூர்,அக்.28: குளத்தூர் துர்க்கையம்மன் கோயில் நவராத்திரி நிகழ்ச்சி நிறைவாக சூரசம்ஹாரம் நடந்தது.குளத்தூர் தெற்குதெருவீதியில் உள்ள துர்க்கையம்மன் கோயில் நவராத்திரி விழா கடந்த 17ம்தேதி துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்களும் கோயில் வளாகத்தில் கொலு பொம்மைகளை வைத்து மாலை சிறப்பு பூஜை நடந்தது. நவரத்திரி பத்தாம் நாள் நிறைவாக பெண்கள் பஜனைபாடி விளக்கு பூஜை நடத்தினர். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை சூரசம்ஹார நிகழ்ச்சியாக சூரனை முக்கியவீதியில் ஊர்வலமாக இழுத்து சென்று கோயில் முன்பு இருந்த துர்க்கையம்மன், சூரனை வதைக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு பலவித அபிஷேகம் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கபட்ட தேரில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.

Tags : Navratri festival ,Kulathur temple ,
× RELATED வரதராஜப்பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா