×

வேலூரில் இருந்து 266 போலீசார் ராமநாதபுரம் பயணம் தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு

வேலூர், அக்.28: தேவர் ஜெயந்தி விழாவையொட்டி வேலூரில் இருந்து 266 போலீசார் ராமநாதபுரத்துக்கு நேற்று சென்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளை முன்னிட்டு, தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை ஆண்டுதோறும் அக்டோபர் 30ம்தேதி நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு நடைபெறவுள்ள விழாவையொட்டி வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் தலைமையில், டிஐஜி காமினி மேற்பார்வையில், 500 போலீசார் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு செல்கின்றனர். வேலூர் ஏடிஎஸ்பி மதிவாணன் தலைமையில் 266 போலீசார் நேற்று காலை நேதாஜி ஸ்டேடியத்தில் இருந்து, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றனர். இவர்கள் 30ம் தேதி வரை பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : policemen ,Vellore ,festival ,Ramanathapuram ,Thevar Jayanti ,
× RELATED இன்று முதல்வர் சிவகங்கை வருகை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்