×

டிக் டாக் மூலம் பழக்கம் திருநங்கையுடன் குடும்பம் நடத்திய கேரள பட்டதாரி இளம்பெண் மீட்பு: நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் நடவடிக்கை


சென்னை: கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரியா (22). (பெயர் மாற்றப்பட்டுள்ளது. பட்டதாரியான இவருக்கு, டிக்டாக் செயலி மூலம் சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக டிக்டாக்கில் பாடல்களுக்கு நடனமாடியுள்ளனர். மத்திய அரசு டிக்டாக் செயலியை தடை செய்த பிறகு இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரின் நட்பு காதலாக மாறியுள்ளது. இருவரும் சேர்ந்து வழலாம் என்று முடிவு செய்துள்ளனர். கொரோனா காலத்தால் இருவரும் உடனே சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தளர்வுக்கு பிறகு கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு திருநங்கை சென்றுள்ளார். பின்னர் இருவரும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்து, நுங்கம்பாக்கத்தில் அறை எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதுபற்றி அறிந்த பிரியாவின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பிரியாவின் பெற்றோர் நீதிமன்றத்தை நாடி மகளை மீட்டு தர வேண்டும் என்று வழக்கு  தொடர்ந்தனர். அதன்படி மாயமான இளம்பெண்ணை கண்டுபிடித்து தரும்படி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைதொடர்ந்து கோழிக்கோடு போலீசார் விசாரையில் அவர் நுங்கம்பாக்கத்தில் இருப்பது தெரியந்தது. உடனே தனிப்படை போலீசார் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி உதவியுடன் பிரியா வீட்டிற்கு சென்றனர். போலீசாரை கண்டதும் பிரியா ‘நான் மேஜர்’ என் விருப்பத்தின்படி தான் திருநங்கையுடன் வசித்து வருகிறேன். என்னை கேரளா போலீசாருடன் அனுப்ப கூடாது என்று நுங்கம்பாக்கம் போலீசாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, நீதிமன்றத்தில் உனது விருப்பத்தை தெரிவித்து உன் விருப்பம் போல் திருநங்கையுடன் சேர்ந்து வாழுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளனர். அதை ஏற்று கொண்ட பிரியா, கேரளா போலீசாருடன் நேற்று முன்தினம் கோழிக்கோடுக்கு சென்றார்.

Tags : Kerala ,teenage girl ,
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...