மீஞ்சூர் ஒன்றியத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

பொன்னேரி: மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய காணியம்பாக்கம் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மைய கட்டிடம், ரூ.6.5 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டிடம், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் உள்ளிட்டவைகள் திறக்கப்பட்டன. ரூ.31.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த நிலையங்களை திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் உமா மகேஸ்வரி, மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் காணியம்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் கா.சு.ஜெகதீசன், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>