×

கிராமங்களில் சிசிடிவி; போலீசார் ஆலோசனை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை டிஎஸ்பி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள ஊத்துக்கோட்டை மற்றும் பென்னலூர்பேட்டை காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களின் தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் காவல் துறையினரின் ஆலோசனைக்கூட்டம் நேற்று முன்தினம் ஊத்துக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி சாரதி  தலைமை தாங்கினார். ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் குமார், எஸ்.ஐ.ராக்கிகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் டிஎஸ்பி கூறியதாவது, ஒவ்வொரு ஊராட்சியிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். மேலும் கிராமங்களுக்கு புதியவர்கள் யாராவது வந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆதார் அட்டை இல்லாமல் புதியவர்களுக்கு வீடு வாடகைக்கு விடக்ககூடாது. இந்த சிசிடிவி கேமராக்கள் அமைப்பதின் மூலம் குற்றங்களை தடுக்க முடியும். சிசிடிவி கேமரா வைத்தால் தான் குற்றங்களை தடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : CCTV ,villages ,
× RELATED திருப்பதி மலைப்பாதையில் மீண்டும்...