×

டீக்கடையில் செல்போன் திருடிய 2 பேர் கைது

தஞ்சை, அக். 28: தஞ்சை கீழவாசலை சேர்ந்தவர் அக்பர் அலி. டவுன் போலீஸ் ஸ்டேஷன் சாலையில் டீக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவர் வேலை பார்த்து கொண்டிருந்தபோது அவரது செல்போனை காணவில்லை. இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில் ஒரத்தநாடு அருகே உள்ள ஊரணிபுரத்தை சேர்ந்த சிவா (48), தஞ்சை கீழவாசல் சேர்ந்த உதயா (32) ஆகிய 2 பேர் செல்போன் திருடியது தெரியவந்தது. இதையடுத்து சிவா, உதயாவை கைது செய்து செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். வாலிபர் கைது: கும்பகோணம் நால்ரோடு பைராகிதோப்பு தெருவை சேர்ந்தவர் கீர்த்திவாசன் (24). நகராட்சி கழிவறை மேற்பார்வையாளர். இவர் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் உள்ள நகராட்சி கழிவறை வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவர் பைக்கில் வைத்திருந்த ரூ.500 மற்றும் செல்போனை ஏஆர்ஆர் காலனியில் வசிக்கும் வேல்முருகன் மகன் முருகபாண்டி (20) திருடி கொண்டு ஓடினார். இதை பார்த்து முருகபாண்டியை விரட்டி சென்று கீர்த்திவாசன் பிடித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிந்து முருகபாண்டியை கைது செய்தனர்.

Tags : tea shop ,
× RELATED செல்போன் திருடிய 2 பேர் கைது