×

தஞ்சை மாவட்டத்தில் 14 தாசில்தார் நிலையில் உள்ள அதிகாரிகள் பணியிட மாற்றம்

தஞ்சை, அக். 28: தஞ்சை மாவட்டத்தில் 14 தாசில்தார் நிலையில் உள்ள அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி டாஸ்மாக் உதவி மேலாளராக இருந்த புண்ணியமூர்த்தி பூதலூர் வட்டார சமுக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், பூதலூரில் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக இருந்த ராமலிங்கம் டாஸ்மாக் உதவி மேலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியர் கணேஷ்வரன் ஒரத்தநாடு வட்டாட்சியராகவும், ஒரத்தநாடு வட்டாட்சியர் அருள் பட்டுக்கோட்டை சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், பட்டுக்கோட்டை சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அருள்பிரகாசம், தஞ்சாவூர் வரவேற்பு தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் தஞ்சாவூர் வரவேற்பு தனி வட்டாட்சியர் முருகவேல், பாபநாசம் வட்டாட்சியராகவும், பாபநாசம் வட்டாட்சியர் கண்ணன் கும்பகோணம் வட்டாட்சியராகவும், கும்பகோணம் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் திருவிடைமருதூர் வட்டாட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவிடைமருதூர் வட்டாட்சியர் சிவக்குமார் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அலகு தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த தனி வட்டாட்சியர் பிரபாகரன் கும்பகோணம் கலால் மேற்பார்வை அலுவலராகவும், கலால் மேற்பார்வை அலுவலராக இருந்த மாதேஸ்வரி கும்பகோணம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கும்பகோணம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக இருந்த முருககுமார் தஞ்சாவூர் அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியராகவும், தஞ்சாவூர் கலால் கோட்ட அலுவலர் அருணகிரி பூதலூர் வட்டாட்சியராகவும், பூதலூர் வட்டாட்சியர் சிவக்குமார் தஞ்சாவூர் கலால் கோட்ட அலுவலராகவும் பணியிடமாற்றம் செய்து கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Tanjore District ,
× RELATED தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு