×

தஞ்சை முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் கட்டிட பணி ஆய்வு

தஞ்சை, அக். 28: தஞ்சை ரயில் நிலையம் அருகே உள்ள முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகம் மற்றும் மேம்பாலம் அருகே உள்ள அரசு செவித்திறன் குறைபாடுடையோர், பார்வை குறைபாடுடையோர் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல மேற்கொள்ளப்படும் கட்டிட பணிகளை கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். அப்போது திட்ட மதிப்பீடுகள் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். மேலும் வளாகத்தில் பயன்பாடற்று மிகவும் பழுதடைந்து காணப்படும் கட்டிடங்களை பராமரிப்பு செய்வது தொடர்பான ஆலோசனை மேற்கொண்டு புதிய பணிகள், பழைய கட்டிட அகற்றும் பணிகளை விரைந்து செயல்படுத்த அறிவுறுத்தினார். பின்னர் வளாகத்தில் உள்ள கடைகளை பார்வையிட்டு முழுவதும் செயல்படுகிறதா என்று கேட்டறிந்தார்.

இதைதொடர்ந்து தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள அரசு செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் காது கேளாதவர், பார்வை குறைபாடுடையோர் மேல்நிலைப்பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் வளாகத்தில் உள்ள பார்வையற்றோர் பள்ளிகள், அரசு குழந்தைகள் நல காப்பகத்தை பார்வையிட்டு பள்ளி வளாகங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். மேலும் பள்ளி வளாகத்தில் பூங்காக்கள் அமைப்பு தொடர்பான ஆலோசனை வழங்கினார். இதைதொடர்ந்து பள்ளியில் பயன்பாடின்றி உள்ள கட்டிடங்களின் தர உறுதி மற்றும் கட்டிடங்கள் அகற்றுதல் தொடர்பான ஆலோசனைகளை பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு வழங்கினார். இப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரவீந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் உடனிருந்தனர்.

Tags : Building work inspection ,Tanjore Veterans Welfare Office ,
× RELATED திருவேற்காடு எஸ்ஏ கல்லூரியில் ஆத்திசூடி இலக்கியத் தேடல் நிகழ்ச்சி