×

உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு பஸ் நிலைய வளாகம் மது அருந்தும் பாராக மாறி வரும் அவலம்

கரூர், அக். 28: கரூர் பஸ் நிலைய வளாக பகுதிகளில் இரவு நேரத்தில் குடிமகன்கள் சரக்கு அடிக்கும் மையமாக மாற்றி வருவதால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். கரூர் நகரப்பகுதிகளில் மட்டும் 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இதில் கரூர் பஸ் ஸ்டாண்ட்டை சுற்றிலும் ஐந்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளில் பார்கள் செயல்படுவதில்லை. இதன் காரணமாக பஸ் ஸ்டாண்ட் உட்பட பல்வேறு பகுதிகளை பார்களாக மாற்றி குடிமகன்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இருந்து பயணிகள் வெளியேற பிரதான இரண்டு நுழைவு வாயில் பகுதிகளை தவிர, வர்த்தக நிறுவனங்களுக்கு இடையே வெளியே செல்லவும் வழி உள்ளது.

இரவு நேரங்களில் சரக்கு பாட்டில்களுடன் இந்த பகுதிக்கு வரும் குடிமகன்கள் சரக்கை சந்து பகுதிகளில் குடித்து விட்டு, சைடீஸ், பாட்டில்களை அப்படியே போட்டு விட்டுச் செல்கின்றனர். இதனால், இரவு நேரங்களில் இதுபோன்ற பகுதிகளில் வழியாக பயணிகள் செல்ல அஞ்சி வருகின்றனர். கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேரூந்து வசதி உள்ளது. இந்நிலையில் இரவு நேரங்களில் இதுபோன்ற செயல்களால் பல்வேறு பாதிப்புகளை பயணிகள் சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு குற்றச்சம்பவங்களும் நடைபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன எனவும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற பகுதிகளை பார்வையிட்டு அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : High Court Judge ,
× RELATED தேர்தலில் தீவிரமாக பணியாற்றினால் வெற்றி உறுதி: முதல்வர் பழனிசாமி பேச்சு