×

தேவர் குருபூஜைக்கு கமுதி செல்வதற்கு அரசியல் கட்சியினர் அனுமதி பெற வேண்டும்

நாகை,அக்.28: நாகை எஸ்பி ஓம்பிரகாஷ்மீனா ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; நாகை மாவட்டத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 113வது பிறந்தநாள் விழா மற்றும் 58வது குருபூஜை வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள செல்வோர் கடைபிடிக்க நெறிமுறைகளை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக அரசின் அறிவுரையின்படி ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். குருபூஜைக்கு செல்லும் அரசியல் கட்சித் தலைவர்கள் பிரதிநிதிகள் மற்றும் மற்ற அமைப்பினர் (ஐந்து நபர்களுக்கு) மிகாமல் கலெக்டரிடம் விண்ணப்பித்து முறையான முன் அனுமதி மற்றும் வாகனத்திற்கான அனைத்து அனுமதியும் பெற்று அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து செல்ல வேண்டும்.

குருபூஜைக்கு செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் வழியே மட்டுமே பயணிக்க வேண்டும். குருபூஜைக்கு செல்வோர். கொரோனோ வைரஸ் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசு அறிவுறுத்தியுள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து செல்ல வேண்டும். குருபூஜைக்கு செல்லும் வாகனங்களில் ஆயுதங்கள், கற்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்லக்கூடாது. வாகனங்களில் செல்பவர்கள் வெடிகளை வெடிக்க கூடாது. மேலும் வாகனங்களில் சாதி மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி பயணம் செய்யவோ கோஷங்களை எழுப்பக்கூடாது. குருபூஜைக்கு செல்பவர்கள் பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தவும் இயக்கக் கூடாது.

Tags : parties ,Thevar Gurupuja ,
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...