×

காரைக்காலில் பைக்குகள் திருடிய வாலிபர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்

காரைக்கால், அக்.28: காரைக்கால் விழிதியூர் கிராமத்தில் இயங்கி வரும் சாராயக்கடை அருகே, கவுதம், மதியழகன் ஆகியோர் நிறுத்தி வைத்திருந்த 2 பைக்குகளை, அங்கு வந்த இரு வாலிபர்கள், திருடி சென்றனர். அதை பார்த்த பைக் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள், அவர்களை விரட்டிபிடித்து நிரவி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, எஸ்.ஐ சக்திவேல் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, காரைக்கால் பெண் தாதா எழிலரசி வீட்டில் காவல்பணி செய்துவந்த, சென்னை ராமாபுரத்தை சேர்ந்த செல்வம் மகன் சூரியபிரகாஷ்(25), நாகை எம்.ஜி.ஆர் நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சுந்தரம் மகன் கார்த்தி(20), ஆகியோர் என்பதும், இவர்கள் மீது பல்வேறு திருட்டு வழக்கு இருப்பதும் தெரியவந்தது. இது தொடார்பாக இருவரையும போலீசார் கைது செய்தனர். பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Tags : Karaikal ,youths ,public ,
× RELATED புதுச்சேரியை தொடர்ந்து காரைக்காலிலும் 144 தடை உத்தரவு