தாந்தோணிமலை கணபதிபாளையத்தில் சுற்று சுவர் இன்றி ஆபத்தான நிலையில் பள்ளி கட்டிடம்

கரூர், அக். 28: கரூர் தாந்தோணிமலை கணபதிபாளையம் துவக்கப்பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் தாந்தோணிமலை கணபதிபாளையம் அருகே துவக்கப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வெட்டப்பட்டுள்ளதால் பள்ளி வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. கொரோனா பரவல் குறைந்து வரும் விரைவில் பள்ளிகள் திறக்கவும் வாய்ப்புகள் உள்ளது எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் எந்தவித பாதுகாப்பின்றி உள்ள பள்ளி வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் எழுப்ப தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories:

>