×

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி

திருப்பூர், அக். 28: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொேரானாவுக்கு 5 பேர் பலியாகினர். மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 5 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். அதன்படி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 74 வயது பெண், 70 வயது ஆண், 87 வயது ஆண், 51 வயது பெண், 36 வயது ஆண் ஆகியோர் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை, கோவை மருத்துவமனை, ஈரோடு அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் 5 பேரும் சிகிச்சை பலனின்றி நேற்று பலியாகினர். இதனால் தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 99 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருப்பூர் மாவட்டத்தில்  கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 286 ஆக உயர்ந்துள்ளது.  
நேற்று ஒரே நாளில் 92 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 978 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 11,123 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags : Corona ,Tirupur ,district ,
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி