×

நடைபாதை சிறு வியாபாரிகள் பாதிப்பு

ஊட்டி, அக். 28:  ஊட்டிக்கு  நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா  பயணிகளில் பெரும்பாலானவர்கள் தாவரவியல் பூங்காவிற்கு செல்வது வழக்கம். இது  தவிர ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா போன்ற பகுதிகளுக்கும்  செல்கின்றனர். இந்நிைலயில், இந்த சுற்றுலா தலங்களுக்கு செல்லும்  சாலையோரங்கள் மற்றும் நடைபாதைகளில் ஏராளமான சிறு வியாபாரிகள் பழம், பொம்மைகள்,  கேரட், ேசாளம், வெம்மை ஆடைகள் விற்பனை செய்வது வழக்கம். கடந்த 6 மாதமாக கொரோனா  பாதிப்பு காரணமாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்ட நிலையில், இவர்கள் கடைகள்  அனைத்தும் அடைக்கப்பட்டு வாழ்வாதாரம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர்.  

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது சுற்றுலா  பயணிகள் வர துவங்கியுள்ளனர். ஆனால், குறிப்பிட்ட அளவிலான சுற்றுலா  பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இதனால், தொடர் விடுமுறை வந்த போதிலும்  சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால் நடைபாதை கடைகள் எதுவும்  திறக்கப்படவில்லை. தொடர்ந்து மூடியே கிடக்கின்றன. முழுமையாக சுற்றுலா  பயணிகள் வர அனுமதித்தால் மட்டுமே இந்த கடைகளை திறக்க முடியும் என சிறு  வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

Tags : traders ,
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...